கறுப்பு எள்ளின் வியப்பூட்டும் 10 ஆரோக்கிய நன்மைகள்!
நமது சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் ஒளிந்திருக்கும் மிக முக்கியமான ஒரு இயற்கை உணவு மருத்துவப் பொருள் கறுப்பு எள் ஆகும். இப்பொழுதும் கிராமப்புறங்களில் எள் குறிப்பாக கருப்பு எள் பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன காரணம் அதில் உள்ள மருத்துவ குணங்கள் தான். நவீனகால டயட் நிபுணர்களும் கருப்பு எள்ளை ஒரு சூப்பர் ஃபுட் என்றே கருதுகிறார்கள். நீங்கள் Black sesame seeds benefits in tamil என்று இணையத்தில் தேடுபவராக இருந்தால், உங்களுக்கான சரியான பதிவு இதுவே. தினசரி நாம் சந்திக்கும் எண்ணற்ற ஆரோக்கிய பிரச்சினைகளுக்குத் முழுத்தீர்வாக அமையும் கறுப்பு எள் நன்மைகள் மற்றும் அதன் வியப்பூட்டும் 10 ஆரோக்கிய பலன்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம். எள்ளில் என்னென்ன ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது? எள்ளில் (கருப்பு) புரதசத்து (புரோட்டீன்), ஆரோக்கியமான நன்மை விளைவிக்கும் நல்ல கொழுப்புகள் (மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் எனப்படும் HDL (ஹைப்பர்டென்சிட்டி லிப்போப்ரோட்டீன்) கொழுப்பு), fiber எனப்படும் நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து எனப்படும் கால்சியம், இரும்புச்சத்து, து...