கறுப்பு எள்ளின் வியப்பூட்டும் 10 ஆரோக்கிய நன்மைகள்!
நமது சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் ஒளிந்திருக்கும் மிக முக்கியமான ஒரு இயற்கை உணவு மருத்துவப் பொருள் கறுப்பு எள் ஆகும். இப்பொழுதும் கிராமப்புறங்களில் எள் குறிப்பாக கருப்பு எள் பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன காரணம் அதில் உள்ள மருத்துவ குணங்கள் தான். நவீனகால டயட் நிபுணர்களும் கருப்பு எள்ளை ஒரு சூப்பர் ஃபுட் என்றே கருதுகிறார்கள். நீங்கள் Black sesame seeds benefits in tamil என்று இணையத்தில் தேடுபவராக இருந்தால், உங்களுக்கான சரியான பதிவு இதுவே. தினசரி நாம் சந்திக்கும் எண்ணற்ற ஆரோக்கிய பிரச்சினைகளுக்குத் முழுத்தீர்வாக அமையும் கறுப்பு எள் நன்மைகள் மற்றும் அதன் வியப்பூட்டும் 10 ஆரோக்கிய பலன்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
எள்ளில் என்னென்ன ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது?
எள்ளில் (கருப்பு) புரதசத்து (புரோட்டீன்), ஆரோக்கியமான நன்மை விளைவிக்கும் நல்ல கொழுப்புகள் (மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் எனப்படும் HDL (ஹைப்பர்டென்சிட்டி லிப்போப்ரோட்டீன்) கொழுப்பு), fiber எனப்படும் நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து எனப்படும் கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின்கள் B மற்றும் E, மேலும் செசமின் (sesamin) மற்றும் செசமோலின் (sesamolin) போன்ற உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ள ஒரு இயற்கை உணவு தான் கருப்பு எள். நீங்கள் புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய குறிப்பு என்னவெனில் உண்மையில் கருப்பு எள்ளில் தான் வெள்ளை எள்ளை விட அதிக நன்மை தரக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சற்றே மிகையாக உள்ளதாக உணவியல் ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கிறது .
1. எலும்புகளை இரும்பு போல் வலுவாக்கும் கறுப்பு எள் (Bone Health): கருப்பு எள்ளில் பொதிந்துள்ள அதிகப்படியான சுண்ணாம்பு சத்து எனப்படும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை bone density எனப்படும் எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தவும், அதாவது பொதுவாக மாதவிலக்கு நின்ற பெண்கள் மற்றும் ஆண் பெண் வயதானவர்கள் ஆகியோரிடையே எலும்பு அடர்த்தி குறைதல் (ஆஸ்டியோபோரோசிஸ்) என்ற முக்கியமான நோய் பிரச்சனையை பெருமளவு தடுக்கும் பண்பு கருப்பு எள்ளுக்கு உள்ளது.
2. அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு கறுப்பு எள் நன்மைகள் (Hair Growth): கருப்பு எள்ளில் காப்பர் எனப்படும் தாமிரம், ஜின்க் எனப்படும் துத்தநாகம், அத்தோடு அதில் உள்ள நிறைய புரோட்டீன் சத்துக்கள் ஆகியவை முடி வளர்ச்சிக்கு சிறப்பாக உதவிபுரியும் தன்மை உள்ளது. மேலும் சிறுவயதில் பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் இளநரை பிரச்னை ஏற்படாமால் இருக்க மற்றும் ஹேர் தின்னிங் என்று சொல்லப்படும் முடி மெலிதல் ஏற்படாமலும் காக்கிறது.
3. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கும் எள் (Heart Health): HDL என்று சொல்லப்படும் நல்ல கொழுப்புகள் உடலில் அதிகமாக இருப்பது LDL என்று சொல்லப்படும் கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து அகற்ற உதவுகிறது; அத்தோடு கருப்பு எள்ளில் புதைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தை முழுமையாக பாதுகாக்க உதவிசெய்கிறது, மேலும் ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை உடலில் குறைக்க இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகின்றன.
4. கருப்பு எள் நமக்கு உடல் சக்தி உயர்த்த மற்றும் & உடல் அசதியைப்போக்க உதவுகிறதுகுறைக்கிறது: கருப்பு எள்ளில் உள்ள நல்ல ஊட்டச்சத்துக்கள் நமது உடலில் சோர்வை நீக்க தேவையான அதிகப்படியான ஆற்றலை வாரி வழங்குகிறது.
5. சர்க்கரை நோயாளிகளுக்கு கறுப்பு எள் நன்மைகள் (Diabetes Management): உடலின் சர்க்கரை அளவை சீராக வைக்க கருப்பு எள் உதவுகிறது. கருப்பு எள்ளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து (fiber), HDL நல்ல கொழுப்புகள், மேலும் அதில் உள்ள மெக்னீசியம் சத்து போன்றவை கூட்டாக செயல்பட்டு இரத்தத்தில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரை அளவைச் ஒரே சீராக வைத்திருப்பதால், சர்க்கரை நோயின் கடுமை உடலைத் தாக்காமல் காப்பாற்றுகிறது. எனவே டயாபடீஸ் உள்ளவர்களின் ஒரு மருத்துவ தோழன் என்றே கருப்பு எள்ளை சொல்லலாம், இருந்தபோதும் சர்க்கரை டேப்லெட் எடுப்பவர்கள் கருப்பு எள்ளை ஒரு மருந்தாகக் கருதி டேப்லெட் எடுப்பதை நிறுத்தக்கூடாது.
6. செரிமானப் பிரச்சினைகளுக்கும் மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வு (Digestive Health): கருப்பு எள் ஜீரண மண்டலத்தின் சக்தியை சீராக வைக்க உதவுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் கருப்பு எள்ளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து குடல் சிறப்பாக இயங்குவைத்தில் துணைபுரிகிறது. அத்தோடு, மனித மலத்தை இளக்கி விடுவதால் மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் இருக்க உதவுகிறது.
7. தோல் அழகில் எள்ளின் பங்கு: பொதுவாக அனைவரும் குறிப்பாக பெண்கள் அழகான பளபளப்பான தோல் வேண்டும் என்று விரும்புவார்கள். கருப்பு எள்ளில் உள்ள வைட்டமின் E சத்து தோல் பளபளப்பிற்கு துணைசெயகிறது. மேலும், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (antioxidants) சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து (free radicals) பாதுகாக்கும் கவசமாக செயல்பட்டு இயற்கையான சருமத்திற்கு புதிய பொலிவை ஏற்படுவதில் உதவுகிறது.
8. பெண்களின் ஆரோக்கியத்திற்கும் ஹார்மோன் சமநிலைக்கும் கறுப்பு எள் (Women's Health): ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் கருப்பை எள். பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவது, இதன்காரணமாக இரத்தசோகை என்ற ஹீமோகுளோபின் குறைபாடு நோய் ஏற்படுகிறது. கருப்பு எள்ளில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைத்து இரத்தசோகை நோய் குணமாக உதவுகிறது.
9. நோய் எதிர்ப்பு சக்தியில் கருப்பு எள்ளின் பங்கு: இதில் உள்ள அதிகப்படியான ஜின்க் எனப்படும் துத்தநாகம், காப்பர் எனப்படும் தாமிரம், அத்தோடு மிகையான செலினியம் சத்துக்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
10. ஆண்கள் மற்றும் பெண்கள் பொதுவான ஆரோக்கியத்தில் கருப்பு எள்ளின் பங்கு: இதில் உள்ள புரோட்டீன் சத்துக்கள் (புரதங்கள்), மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் மற்றும் ஜின்க் என்ற துத்தநாக சத்து போன்றவை உடல் ஸ்டாமினாவை அதிகரிக்க உதவுவதால் ஆண்களின் ஒட்டுமொத்த ஆற்றல் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. வும் உதவுகின்றன மேலும், எள்ளில் உள்ள சிறந்த மினரல்கள் எனப்படும் தாது உப்புக்கள் பெண்களின் மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்துக் காக்கிறது.
### **கருப்பு எள் எடுத்துக்கொள்ளும் அளவு:** தினந்தோறும் 2 முதல் 3 டீஸ்பூன் மேசைக்கரண்டி அதாவது கிராமில் 10 கிராம் முதல் அதிகப்படியாக 15 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம் (இதற்கு அதிகமாக வேண்டாம் ). ஏனெனில், கருப்பு எள் அதிக கலோரி சத்துக்களை உள்ளடக்கிய உணவுப்பொருள் எனவே அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படலாம்.
கருப்பு எள்ளை எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்? கருப்பு எள்ளை சற்றே வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு பாலில் கலந்து தினசரி ஒருவேளை குடிப்பது நல்லது. அல்லது சாதத்தில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம். பெரியவர்கள் கருப்பு எள்ளை இரவு ஊறவைத்து பிறகு உணவிற்கு பிறகு இதை சாப்பிடலாம்.
### **கருப்பு எள் எடுக்கக்கூடாதவர்கள் யார் யார்?
1. அலர்ஜி அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள்: கருப்பு எள்ளை சிலர் எடுத்துக்கொள்ளும்போது உடலில் அரிப்பு ஏற்படுவதால் உணர்ந்தாலோ அல்லது எள்ளை எடுத்துக்கொண்ட பிறகு அரிப்பு உதடு வீக்கம் அல்லது நாக்குபகுதியில் வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது மூச்சு விடுவதில் பிரச்னை அல்லது சிரமம் ஏற்பட்டாலோ உடனடியாக கருப்பு எள் எடுப்பதை நிறுத்துவது நல்லது.
2. உடல் எடை குறைக்கும் டயட் எடுப்பவர்கள்: உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் எள் சாப்பிடுவதால் குறைவாக மட்டுமே எடுக்கவேண்டும். ஏனெனில் இது ஒரு அதிக கலோரி தரும் உணவாகும் (இதற்கு காரணம் கருப்பு எள்ளில் உள்ள அதிகக் கொழுப்பு மற்றும் அதிக கலோரி).
3. கிட்னி பிரச்னை உள்ளவர்கள்: சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சையில் உள்ளவர்கள் கருப்பு எள் எடுப்பதை தவிர்க்கவேண்டும். இதற்கு காரணம் கருப்பு எள்ளில் உள்ள அதிக புரதசத்து (புரோட்டீன்) சிறுநீரக பிரச்சனையை அதிகமாக்கிவிடலாம் என்பதால் எள் சாப்பிடுவதற்கு முன் முன் டாக்டரிடம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
Author Bio: This is my self experience and authoritative web pages readings only. Not a specialist medical advice.
Disclaimer (பொறுப்புத் துறப்பு): இக்கட்டுரை பொதுவான தகவல்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. தங்களின் உணவு முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் தகுதியான மருத்துவரை அணுகவும்.
Comments
Post a Comment