கொலஸ்ட்ரால் & ரத்த அழுத்தத்திற்கு எந்த பூண்டு சிறந்தது? நாட்டு பூண்டு vs மலை பூண்டு முழு ஒப்பீடு!

# நாட்டு பூண்டு vs மலை பூண்டு: எடுத்து அதிக மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது:  ஒரு முழுமையான ஒப்பீடு!

Country garlic vs hill garlic health benefits comparison


நமது சமையலறையில் அஞ்சறைப் பெட்டியிலும், தினசரி ரசத் தாளிப்பிலும் நீக்கமுடியாத ஒரு இடத்தைப் பிடித்திருப்பது பூண்டு தான். தமிழர்களின் தொன்மையான பழமொழி என்னவென்றால் "உணவே மருந்து, மருந்தே உணவு", இந்தப் பழமொழிக்கு சரியான உதாரணம் பூண்டு தான் என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள்.  ஆனால் நாம் மார்க்கெட்டுக்கு பூண்டு வாங்க செல்லும்போதோ அல்லது மளிகைக்கடைக்கு செல்லும்போது அங்கே வெவ்வேறு அளவுகள் மற்றும் விலைகளில் இரண்டு வகையான பூண்டுகள் இருக்கும்.  அப்போது நம் முன் நிற்கும் ஒரு பெரிய குழப்பம்: "நாட்டுப் பூண்டு வாங்கலாமா? அல்லது மலைப் பூண்டு வாங்கலாமா? என்பதுதான்.  பெண்கள் பொதுவாக எப்படி யோசிப்பார்கள் என்றால் சமையலறையில் உரிக்க ஈசியாக இருப்பது சைசில் பெரிய மலைப்பூண்டு என்பதால் அதையே விலை அதிகம் என்றாலும் வாங்குவார்கள்.  ஆனால், மருத்துவ ரீதியாக உடலுக்கு அதிக நன்மைகளைத் தரும் பூண்டு எது?"


இன்றைய அவசரமான காலகட்டத்தில் தவறான உணவுக் கட்டுப்பாடு, மனஅழுத்தம் மற்றும் சுற்றுப்புற மாசுக்கள் காரணமாக நிறைய மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை, சர்க்கரை நோய் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு போன்ற பலவகைப் பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறோம். மேலும் இந்தப் பிரச்சனைகளை தீர்க்க மருத்துவர்கள் எழுதித்தரும் குளிகைகளை மட்டுமே பயன்படுத்தும் முறைக்கு மாறிவிடும் கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.  இதைத் தவிர்த்து இயற்கை முறையில் நம் உடலில் நோய் தவிர்த்து வாழ, நமது சமையலறையில் அஞ்சறைப்பெட்டியுள் உறங்கிக்கிகொண்டிருக்கும் பூண்டை ஒரு இயற்கை மருந்தாகப் பயன்படுத்துவது உலகம் முழுக்க பல தலைமுறைகளாக பல குடும்பங்களில் பாரம்பரியமாக செய்துவருகிறார்கள்.


நாம் இந்த விரிவான blog வலைப்பதிவில் நாட்டு பூண்டு மற்றும் மலை பூண்டு இரண்டில் இதில் மருத்துவ நன்மைகள் என்பது பற்றியும், மேலும் அவற்றில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் எவை எவை, நோய்களைக் குணப்படுத்தும் திறன் மற்றும் கடைசியாக முக்கியமாக நாட்டு பூண்டு மற்றும் மலை பூண்டு இரண்டில் எது மருத்துவ ரீதியாக அதிக சக்தி வாய்ந்தது என்பதைப் பற்றியும் காண்போம்.

நாட்டுப் பூண்டு என்றால் என்ன - பாரம்பரிய நாட்டுப் பூண்டு நன்மைகள்

## நாட்டுப் பூண்டு என்றால் என்ன?

**நாட்டுப் பூண்டு (Naattu Poondu / Country Garlic)** என்பது பூமியின் சமவெளிப் பகுதிகளில் இயற்கையாகப் பரவலாக வழிவழியாக விளைவிக்கப்படும் பூண்டு வகை. நாட்டுப் பூண்டின் பற்கள் (cloves) அளவு சிறியதாக மற்றும் மெலிதான தோலைக் கொண்டதாகவும் இருக்கும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சமவெளிப் பகுதிகளில் இது அதிகளவில் பயிரிடப்படுகிறது.


### நாட்டு பூண்டின் முக்கிய மருத்துவ நன்மைகள் - Country Garlic Medicinal Benefits


### நாட்டு பூண்டின் முக்கிய மருத்துவ நன்மைகள்:

**எளிதில் செரிமானம் அடையும்:** தினசரி உணவில், குறிப்பாக தென்னிந்திய உணவுகளில் தயாரிக்கப்படும் ரசம், சாம்பார், காரக்குழம்பு, காரச் சட்னி மற்றும் துவையல்களில் சேர்க்க நாட்டு பூண்டு மிகவும் சிறந்ததாக உள்ளது என்பதற்கு காரணம் அதன் அதிகக் காரத்தன்மை தான்.  இதன் காரணமாக உணவின் ருசி கூடுவதோடு மட்டுமல்லாமல் செரிமானத்தையும் எளிதாக்குகிறது.

**செரிமானக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்:** வயிற்றில் ஏற்படும் செரிமானக் குறைபாடு, வயிறு பொருமல் (abdominal bloating) எனப்படும் உப்பசம், பித்தம் எனப்படும் உடற்சூடு மற்றும் குடலில் தொல்லை செய்யும் வாயுத்தேக்கம் போன்றவற்றை உடனையாகப் போக்கும் குணம் நாட்டு பூண்டுக்கு உள்ளது.

**நோய் எதிர்ப்புச் சக்தி:** தினமும் 2 முதல் 3 நாட்டு பூண்டு பற்கள் உணவில் சேர்த்தால் சாதாரண நமக்கு ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டையில் தொற்றுக்கள் வராமல் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.

**பசியின்மையைப் நீக்கும்:** பசியின்மை நோயால் அவதிப்படுபவர்களுக்கு, நாட்டு பூண்டு சிறந்த மருந்தாகும்.. கொஞ்சம் நாட்டுப்பூண்டை நெய்யில் வதக்கிச் சாப்பிடும்போது செரிமான சுரப்பிகள் சிறப்பாகத் தூண்டப்பட்டு பசி நன்றாக எடுக்கும்.


## மலைப்பூண்டு என்றால் என்ன? அதன் தனிச்சிறப்பு என்ன?

**மலைப்பூண்டு (Hill Garlic)** என்பது கடல் மட்டத்திலிருந்து மேலான உயரத்தில் உள்ள மலைகளில் குளிர் பிரதேசங்களான கொடைக்கானல், நீலகிரி (ஊட்டி), வயநாடு போன்ற பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய சிறப்பு வகைப் பூண்டு இது.  அதிலும் குறிப்பாக, **"கொடைக்கானல் மலை யில் விளையும் பூண்டு"** அதன் ஒப்பில்லாத மருத்துவ குணங்களுக்காக மற்றும் அடர்த்தியான வாசனைக்காகவும் இந்திய அரசின் புவிசார் குறியீடு (**GI Tag - Geographical Indication **) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மலைப் பகுதியில் குளிர்ந்த காலநிலையில் இந்தப்பூண்டு விளைவதால் மலையின் மண் வளம் மற்றும் நீண்டநாட்கள் வளர்ச்சி காலம் போன்றவை காரணமாக, இதில் இயற்கை வேதிச் சேர்மங்களான **அலிசின் (Allicin), ஆர்கானோசல்பர் (Organosulfur compounds), துத்தநாகம் (Zinc), செலினியம் (Selenium) மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்** மிக அதிக அளவில் செறிந்து காணப்படுகின்றன.


### மலை பூண்டின் 8 ஆச்சரியமூட்டும் மருத்துவ நன்மைகள்:

1. **கெட்ட கொழுப்புகளைக் (low density lipoproteins - LDL) மிகுதியாகக் குறைக்கும்:** ரத்தக் குழாய்களில் படிந்துள்ள ஆபத்துக்களை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புகளை கரைத்துவிடும்.  உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்புகளை (HDL) அதிகரிக்க மலைப் பூண்டு பெரிய பங்கு வகிக்கிறது.
2. **இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு:** மலைப்பூண்டு ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் தன்மை உள்ளதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. இதன் காரணமாக, உயர் ரத்த அழுத்தம் (Hypertension) கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதோடு,மாரடைப்பு மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது.
3. **பிரசவத்திற்கு பின் உடல்தேற உதவும்:** பிரசவித்த பெண்களுக்கு உடலை மீண்டும் தேற்றவும், கர்ப்பப்பையையில் உள்ள அசுத்தங்கள் நீங்க மற்றும் தாய்ப்பால் சுரப்பை தேவையான அளவு அதிகரிக்கவும் தரப்படும் பூண்டு லேகியம், மலை பூண்டில் தான் தயாரிக்கப்படுகிறது.
4. **மூட்டு வலி மற்றும் வாத நோய்கள்:** மலைப்பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (Anti-inflammatory properties) காரணமாக வாதம் சம்மந்தப்பட்ட நோய்கள், மூட்டு வலி, வீக்கம் மற்றும் தசைப் பிடிப்புகளை விரைவாகக் குணப்படுத்தும் தன்மையுடையது.
5. **ரத்த சர்க்கரை அளவுக் கட்டுப்படுத்தும் தன்மை:** வெள்ளைப்பூண்டு கணையத்தில் இன்சுலின் சுரப்பைத் தூண்டிவிடும் தன்மை உடையதால், ரத்தத்தில் சர்க்கரை அளவைச் ஒரே சீராக வைத்திருப்பதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
6. **பூண்டின் புற்றுநோய் தடுப்பு சக்தி:** மலைப்பூண்டில் அதிகமாக உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆர்கானோசல்பர் சேர்மங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, செல்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவதில் இருந்து தடுக்கின்றன. மேலும், பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்கவும் துணைபுரிகிறது.
7. **மூச்சுக்குழல் பாதை தொற்றுகள்:** ஆஸ்துமா, சைனஸ், ஒவ்வாமை (Allergy) மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு மலைப்பூண்டு சிறந்த நிவாரணியாகும்.
8. **கல்லீரல் நச்சு நீக்கம் (Liver Detox):** பூண்டு நமது உடலில் தங்கும் தேவையற்ற கழிவுகள் மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, இதன்காரணமாக கல்லீரல் பலமடைவதால் அதன் செயல்பாடு சிறப்படைகிறது.

நாட்டு பூண்டு vs மலை பூண்டு: ஒப்பீட்டு அட்டவணை

இவ்விரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசங்களை கீழே உள்ள அட்டவணை மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்:

அம்சங்கள்நாட்டு பூண்டு (Country Garlic)மலை பூண்டு (Hill Garlic)
விளையும் இடம்சமவெளிப் பகுதிகள்மலைப் பகுதிகள் (கொடைக்கானல், நீலகிரி)
அளவு & வடிவம்சிறிய பற்கள், மெலிதான தோல்பெரிய தடிமனான பற்கள், கெட்டியான தோல்
காரத்தன்மை & மணம்கடுமையான காரத்தன்மை மற்றும் அடர்ந்த மணம்மிதமான காரம் மற்றும் மணம்
அலிசின் (Allicin) அளவுமிதமானதுமிக அதிகம் (2 முதல் 3 மடங்கு)
சேமிப்பு காலம்2-3 மாதங்கள்8-12 மாதங்கள் வரை கெட்டுப்போகாது
விலைமலிவானது / எளிதில் கிடைக்கும்சற்று அதிக விலை கொண்டது
புவிசார் குறியீடு (GI Tag)இல்லைஉண்டு (கொடைக்கானல் மலை பூண்டு)

## மருத்துவ ரீதியாக எது சிறந்தது? (Scientific Verdict):

இப்போது நமது முதன்மை கேள்விக்கு வருவோம்: **நாட்டு பூண்டு அல்லது மலை பூண்டு — இரண்டில் எது மருத்துவ ரீதியாக அதிக பலன் தரும்?**

> **தெளிவான அறிவியல் முடிவு:** தீவிரமான மருத்துவ ஆற்றல், நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் வீரியம் அடிப்படையில் **"ஒற்றை மலைப் பூண்டு" (Malai Poondu)** தான் முதலிடம் பிடிக்கிறது.


### இதற்கான முக்கிய காரணங்கள்:

1. **அலிசின் அடர்வுச்செறிவு  (Higher Allicin Concentration):** பூண்டின் மருத்துவக் குணத்திற்கு மூலக்காரணமாக இருப்பது 'அலிசின்' என்ற கந்தகச் சேர்மம் மலைப் பூண்டில் அடர்த்தியாக உள்ளது.
2. **நீண்ட ஆயுள் மற்றும் சேமிப்புத் திறன்:** மலைப் பூண்டு பல மாதங்கள் ஆனாலும் சுருக்கம் அடையாமலும் அதன் தன்மை கெட்டுப்போகாமலும் மருத்துவ வீரியத்துடன் இருக்கிறது.
3. **மருத்துவ அடிப்படையிலான பயன்பாடு:** உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய ரத்தநாளங்கள் அடைப்பு ஏற்படாமல் காத்தல், மூட்டு வலி மற்றும் பிரசவ கால பூண்டு லேகியம் போன்ற முக்கிய மருத்துவத் தேவைகளுக்கு மலைப்பூண்டே பரிந்துரைக்கப்படுகிறது.


**பூண்டு பயன்பாட்டில் கவனிக்க வேண்டியது:**

தினசரி சமையல், லேசான வாய்வுத் தொல்லை மற்றும் அன்றாட ஆரோக்கிய பராமரிப்பிற்கு **நாட்டு பூண்டு** முற்றிலும் போதுமானது. எனவே, தீவிர மருத்துவப் பலன் தேவைப்படுவோருக்கு மலைப்பூண்டும், அன்றாடச் சமையலுக்கு நாட்டுப்பூண்டும் சிறந்த தேர்வு!


## பூண்டை எவ்வாறு சாப்பிட்டால் முழு நன்மைகளும் கிடைக்கும்?

பூண்டில் உள்ள அற்புதமான 'அலிசின்' என்ற சக்திவாய்ந்த மருந்துப் பொருள், பூண்டை வெட்டும்போது  அல்லது நசுக்கும் போது தான் உருவாகிறது. எனவே பூண்டை முழுதாக குளிகை போல் அப்படியே விழுங்குவதை தவிர்த்து பின்வரும் வழிகளில் சாப்பிட வேண்டும்:

1. **10 நிமிட தங்க விதி (10-Minute Rule):** பூண்டை பொடியாக நறுக்கி அல்லது நசுக்கி உடனடியாகச் சமையலுக்குப் பயன்படுத்தாமல் 10 நிமிடங்கள் திறந்த வெளியில் அப்படியே வைத்துவிட வேண்டும். அப்படி செய்தால் தான் இது அலிசின் சேர்மம் முழு வீரியத்துடன் உடலில் பயனாக மாற உதவும்.
2. **காலையில் வெறும் வயிற்றில் பூண்டு:** கொலஸ்ட்ரால் பிரச்னை மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், காலையில் 1 பல் ஒற்றை மலைப்பூண்டை நசுக்கி அதனுடன் எரிச்சல் குறைக்க சிறிது தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து எடுத்துக்கொள்ளலாம் அல்லது வெதுவெதுப்பான சூடான நீரில் சாப்பிட்டு வரலாம்.
3. **பூண்டு பால் / நெய் வதக்கல்:** பச்சையாக பூண்டை அப்படியே பயன்படுத்தினால் அதன் காரத்தன்மை வயிற்றை பாதிக்கும் என்பதால், பாலில் வேகவைத்து 'பூண்டு பாலாக' குடிக்கலாம். இது இடுப்பு வலி மற்றும் வாயு பிடிப்பை நீக்கும்.

எது சிறந்தது:  மலைப் பூண்டிலும் நாட்டுப் பூண்டிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனவே எந்த பூண்டு உங்களுக்கு கிடைக்கிறதோ அதை தயங்காமல் பயன்படுத்தலாம். இரண்டுமே உங்கள் வீட்டில் நிறைய இருந்தால் ஒரு நாள் நாட்டுப்பூண்டு பிறகு இன்னொரு நாள் மலைப்பூண்டும் மாற்றி மாற்றி பயன்படுத்தலாம்.

நாட்டுப் பூண்டும், மலைப் பூண்டும் இரண்டுமே ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவுப் பொருட்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. மேலும், மருத்துவ ரீதியாக பார்த்தால், நாட்டு பூண்டில் அலிசின் உருவாகும் திறன் அதிகம் என்றும் ஆனால், மலைப் பூண்டு குறைவானது என்று சொல்ல போதுமான பலமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்று சொல்லலாம்.

## எச்சரிக்கைகள்: யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

பூண்டு இயற்கை மருந்து என்றாலும், சில குறிப்பிட்ட சூழல்களில் அதை உபயோகிப்பதில் சில எச்சரிக்கை தேவை:

* **அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள்:** பூண்டு ரத்தத்தை சற்றே நீர்க்கவைக்கும் (மெலிதாக்கும் - Blood thinner) தன்மை கொண்டது என்பதால், அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள் 2 வாரங்களுக்கு முன்பிருந்தே அதிகளவில் பூண்டு எடுத்துக்கொள்தைத் தவிர்க்க வேண்டும்.
* **கர்ப்பிணிப் பெண்கள்:** கர்ப்ப காலத்தில் அதிக அளவில் பச்சை பூண்டு (குறிப்பாக கடுமையான மலை பூண்டு) சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் அல்லது சமையலில் குறைவாக மட்டுமே சேர்த்துக்கொள்ளலாம்.
* **தீவிர அல்சர் நோயாளிகள்:** குடல் புண், நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி உள்ளவர்கள் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

## முடிவுரை (Conclusion):

சுருங்க சொல்லவேண்டும் என்று சொன்னால், **நம் தினசரி சமையலுக்கும் குடும்பத்தின் தினசரி ஆரோக்கியத்திற்கும் நாட்டுப்பூண்டு ஒரு சிறந்த தோழன்; அதே நேரத்தில், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு மலைப் பூண்டு ஒரு சக்திவாய்ந்த இயற்கை அருமருந்து.**

உங்கள் உடலின் தேவைகளுக்கேற்ப சரியான பூண்டு வகையைத் தேர்ந்தெடுத்து, "உணவே மருந்து" என்ற ஆரோக்கியமான பாதையில் பயணிப்போம்!

Comments