பூண்டு தோல் உரிப்பது ரொம்ப ஈசி - ஐந்து நிமிடத்தில் முடிந்து விடும் இந்த ட்ரிக்ஸ்
பூண்டு தோல் வேகமாக உரிக்க வேண்டுமா ?
கை வலிக்காமல், நேரம் வீணாகாமல் பூண்டு உரிக்கிற இயற்கை டிப்ஸ் இங்கே கொடுத்திருக்கிறோம் - இப்பொழுதே படியுங்கள்.
மாலையில் சமையல் ஆரம்பித்தால் பூண்டு உரிப்பதற்குள் மூடு போய்விடும் இல்லையா?
என்ன சாம்பார் வைக்க வேண்டும் என்று நினைத்து அடுப்படிக்கு போனால் முதலில் இந்த பூண்டு தான் நம் கைகளை சோதிக்கும். பத்து பூண்டு பற்கள் உரிப்பதற்குள் 10 நிமிடம் ஓடிவிடும். நகத்திற்குள் வாசனை வேறு ஒட்டிக்கொள்ளும். விரல் வலிக்கும். இது நம் வீட்டு கதை மட்டுமல்ல உலகம் முழுக்க இருக்கிற எல்லா அம்மாக்களும் அப்பாக்களுக்கும் இதே பிரச்சனைதான்.
ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் பூண்டு தோல் உரிப்பதற்கு ரொம்ப சிம்பிளான இயற்கையான செலவே இல்லாத சில வழிமுறைகள் இருக்கிறது. இன்றைக்கு இந்த பிளாக் போஸ்டில் பூண்டின் சின்ன ஒரு பல் முதல் பெரிய பூண்டு கிழங்கு வரைக்கும் எல்லா வகை பூண்டையும் எப்படி வேகமாக எளிதாக குறிக்கலாம் என்று பார்க்கலாம்.
இதில் எந்த வேதிப்பொருள்கள் என்று சொல்லப்படும் கெமிக்கல்களும் நான் உபயோகப்படுத்துவதில்லை எந்த இயந்திரமும் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்தே நாம் இதை சாதிக்கலாம்.
** பூண்டு தோல் உரிப்பது ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?
பூண்டுக்கு அந்த மென்மையான ஒட்டிக்கொண்டு இருக்கும் தோல் தான் பிரச்சனை இது ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து போகும்போது பூண்டு பற்களை ரொம்ப நெருக்கமாக அந்த தோல் ஒட்டிக்கொண்டு இருக்கும், அதனால் தான் நகத்தில் தான் அந்த தோலை நாம் கிழிக்க முயற்சி செய்யும்போது பாதிப்பூண்டும் தோலோடு ஒன்றாக வெட்டப்பட்டு வீணாகிவிடும். ஆனால் இந்த உலர்ந்த தோலுடன் ஈரப்பதத்தினை நாம் சேர்த்தால் அல்லது கம்பன வச்சு தள்ளிவிட்டால் அது எளிதாக கழன்று வந்துவிடும். இதே தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லா டிரிக்ஸ்களின் ரகசியம்.
**பூண்டு பற்களை பற்களை தனித்தனியாக உரிக்க சிறந்த முறைகள்:
**முறை 1: கத்தியை பக்கவாட்டில் வைத்து அழுத்தும் முறை (Knife Flat-Side Trick): இந்த முறை சமையல் காரர்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பழைய பூண்டு உரிக்கும் ட்ரிக் ஆகும். அது என்னவென்றால், பூண்டு பல்லை மேஜையின் மேல் வைத்து ஒரு பெரிய கத்தியின் தட்டையான பக்கத்தை (flat side) பூண்டு பல்லின் மேலே வைத்து உள்ளங்கையால் ஒரு தடவை லேசாக அழுத்தி விடுங்கள், பூண்டு பல் லேசாக நசுங்கும், பிறகென்ன தோல் தானாக கழன்று விடும். இந்த முறையில் பூண்டின் தோல் எளிதாக கழன்று வந்துவிடும் ஒரு மேஜிக் போல.
Note: இந்த முறையில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், கத்தி கூர்மையாக இருக்கும்பட்சத்தில் நம் கைகளை வெட்டிக்கொள்ளாமல் கவனமாக இருக்கவேண்டும்.
**முறை 2: பூண்டை நசுக்கும் முறை: இந்த முறையில், நிறைய பூண்டு பற்களின் தோள்களை உரிக்க ஆட்டுக்கல் அல்லது கல்வத்தில் பூண்டு பற்களை போட்டு மத்தால் அல்லது கல்வக் கல்லால் அதை லேசாக நசுக்கி நசுக்கி விட்டால் போதும் பூண்டு பற்களின் தோள்கள் தானாக கழன்று வந்துவிடும். நாம் கையால் பூண்டுகளின் தோல்களை எடுத்து விட்டாலே போதும்.
**முறை 3: இரண்டு சில்வர் பாத்திரங்களுக்குள் பூண்டை இட்டு பூண்டை இட்டு மூடி குலுக்கும் முறை (Shake Method): இந்தமுறையில் முழுப்பூண்டையே நாம் உரிக்கலாம். அதாவது, இதில் முழுப்பூண்டின் ஒவ்வொரு பற்களும் உரிந்து வந்துவிடும் என்பது சிறப்பு. முழுப்பூண்டுகள் சிலவற்றை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் இட்டு, அதன்மேல் மூடி போல இன்னொரு பாத்திரத்தை வைத்து 20 முதல் 30 செகண்டுகள் வரை நன்றாகக் குலுக்கவேண்டும். முழுப்பூண்டுகளும் பல பற்களாக உடைந்து வருவதோடு ஒவ்வொரு பற்களின் தோல்களும் தானாகக் கழன்று பிரிந்து வந்துவிடும்.
இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் வைரலான டிரிக் என்று சொல்லலாம். ஆனால், நம்முடைய கொங்குநாட்டு வீட்டு சமையலறைக்கும் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
**முறை 4: தண்ணீரில் பூண்டுகளை ஊற வைக்கும் முறை: இந்தமுறையில் பூண்டுப்பற்களை 5 முதல் 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். இதனால்,பூண்டு தோல்களுக்கும் பூண்டுப்பற்களுக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியில் காற்று மற்றும் தண்ணீர் போகும்போது அவை லேசாகத் தளர்ந்துவிடும். பிறகு, அந்தப் பூண்டு பற்களை விரலால் தொட்டாலே போதும், தானாக உரிந்துவிடும்.
## முறை 5: மைக்ரோவேவ் முறை (Microwave Trick) - (.மிகவும் அவசரத்துக்கு மட்டும்): நமக்கு சமையல் செய்ய போதுமான நேரம் இல்லை என்கிற பட்சத்தில் மட்டும் இந்தமுறையைப் பயன்படுத்தலாம். இந்தமுறையில், முழு பூண்டையும் 10 முதல் 15 செகண்டுகள் வரை ஒரு மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து எடுங்கள். இதன்மூலம், பூண்டில் உள்ள ஈரப்பதம் ஆவியாக மாறி, தோலுக்கும் பூண்டு பற்களுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு தளர்ந்துவிடும். ஆனால், இந்தமுறையில் அதிக நேரம் பூண்டை மைக்ரோவேவ் அடுப்பில் வைத்தால் பூண்டு முழுவதுமாக வெந்துவிடும். எனவே, கவனமாக நேரம் பார்த்து செய்யவேண்டும்.
## முறை 6: சின்ன சின்ன பூண்டு பற்கள் (Elephant Garlic) உரிக்க என்ன செய்யலாம்?
Elephant garlic-க்கு பற்களின் தோல்கள் அதிகமான தடிமனாக இருக்கும். இதற்கு தண்ணீரில் ஊறவைக்கும் முறையும், கத்தியால் பக்கவாட்டில் வைத்து அழுத்தும் முறை (Knife Flat-Side Trick) முறையும் நன்றாக நல்லா வேலை செய்யும். முதலில், தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, பிறகு கத்தியால் நுனி வெட்டி, விரலால் அமுக்கி உரித்தால் எளிதாக உரிந்துவரும்.
## பூண்டு உரிக்கும்போது கவனிக்க வேண்டிய 3 சின்ன டிப்ஸ்:
- **கையில் பூண்டு வாசனை போக:** பூண்டுகளை உரித்த பிறகு கையை ஸ்டீல் spoon வைத்து தேய்த்து கழுவினால் வாசனை விரைவில் நீங்கும்.
- **நேரம் மிச்சம் பிடிக்க:** ஒரு வாரத்துக்கு தேவையான பூண்டுகளை முன்னதாகவே உரித்து, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜ்ல் வைத்தால் ஃப்ரெஷாக இருக்கும்.
- **பூண்டுத்தோல்களை வீணாக்காதீர்கள்:** உரித்த தோலைத் தூக்கி போடாமல், சூப் அல்லது ரசம் வைக்கும்போது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்துவிட்டால், அதில் இருக்கும் முழுசத்தும் நமக்கு கிடைக்கும்.
## பூண்டு - இயற்கையான ஆரோக்கிய களஞ்சியம்:
பூண்டு என்பது வெறும் சுவைக்காக மட்டும் உணவுகளில் சேர்க்கப்படுவது இல்லை. இது நம்முடைய இந்திய நாட்டில் பழங்காலத்தில் காலத்துல இருந்தே மருந்தாகப் பயன்படுத்துற ஒரு பொருள். இதில் இருக்கிற 'அலிசின்' (Allicin) என்ற இயற்கை மருத்துவ மகிமை வாய்ந்த வேதியியல்கூறு உள்ளது. அது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சளி-இருமலுக்கு எதிராகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும் என்று பாரம்பரிய வைத்திய மருத்துவம் கூறுகிறது.
*(குறிப்பு: பூண்டின் மருத்துவ பலன்கள்களுக்காக தனிப்பட்ட முறையில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.)*
## முடிவுரை:
பூண்டு தோல் உரிப்பதற்கு இனிமேல் கஷ்டப்பட வேண்டாம். வீட்ல இருக்குற இரண்டு பாத்திரங்கள் இருந்தாலே போதும், ஒரே நிமிஷத்துல முழுபூண்டையும் உரித்துவிடலாம். இந்த டிரிக்ஸ் எல்லாம் முயற்சிசெய்து பாருங்கள். எந்தமுறை உங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்!
**இந்தப் பதிவு உபயோகமாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்துக்கும் ஷேர் செய்யுங்கள். இது போன்ற இயற்கை சமையல் டிப்ஸ் இன்னும் வேண்டும் என்றால், எங்கள் பதிவுகள வாசிக்க சப்ஸ்கிரைப் செய்துவைத்துக்கொள்ளுங்கள்!**








Comments
Post a Comment